/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை புறநகர் பேருந்து நிலைய பணி விறுவிறு
/
செங்கை புறநகர் பேருந்து நிலைய பணி விறுவிறு
ADDED : ஜூன் 07, 2025 10:34 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், புதிய பேருந்து நிலையம் அருகில், மேற்பார்வை மின்வாரிய அலுவலகம், அரசு போக்குவரத்து கழகம், ஆகியவை அமைந்துள்ளன. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதை தவிர்க்க, புதிய பேருந்து நிலையம் அமைக்க, அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, ஆலப்பாக்கம் ஊராட்சியில், மலையடி வேண்பாக்கம் கிராமத்தில், அரசு மருத்துவக்கல்லுாரிக்கு சொந்தமான 9.95 ஏக்கர் நிலத்தில், செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலையம், அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க, 97 கோடி ரூபாய் மதிப்பிட்டில் டெண்டர் விடப்பட்டது. புதிய பேருந்து நிலைய பணியை கடந்த 2023 ஆண்டு நவ., மாதம் 15ம் தேதி, முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இங்கு, புதிய பேருந்து நிலையம், கடைகள், போக்குவரத்து பணிமனை கட்டடங்கள் கட்டுமான பணி, கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
கலெக்டர் அருண்ராஜ், பேருந்து நிலைய பணிகளை, கடந்த ஏப்ரல் மாதம், ஆய்வு செய்து, பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என,என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பின், கட்டுமான பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.