/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரயில்வே சாலை ஆக்கிரமிப்பை தடுக்க கம்பி வேலி அமைக்கும் பணி தீவிரம்
/
ரயில்வே சாலை ஆக்கிரமிப்பை தடுக்க கம்பி வேலி அமைக்கும் பணி தீவிரம்
ரயில்வே சாலை ஆக்கிரமிப்பை தடுக்க கம்பி வேலி அமைக்கும் பணி தீவிரம்
ரயில்வே சாலை ஆக்கிரமிப்பை தடுக்க கம்பி வேலி அமைக்கும் பணி தீவிரம்
ADDED : அக் 09, 2025 03:22 AM

வேளச்சேரி, வேளச்சேரி ரயில்வே சாலையில், ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும், கம்பி வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது.
வேளச்சேரி - தரமணி சாலை, 3 கி.மீ., துாரம் கொண்டது. இதில், 1.5 கி.மீ., துாரத்தில் குப்பை, இறைச்சி, மருத்துவ கழிவுகள் கொட்டி நாசப்படுத்தினர். குப்பை கொட்டிய லாரிகளை பறிமுதல் செய்தும், குப்பை கொட்டுவது தொடர்ந்தது.
இதனால், குப்பை கொட்டுவதை தடுக்கவும், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்ட இடங்கள், ஆக்கிரமிக்க முயற்சி நடந்த காலி இடங்களில், தடுப்பு வேலி அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது. இதற்கான பணி, 56 லட்சம் ரூபாயில் நடக்கிறது.
துருப்பிடிக்காத இரும்பு வலை பயன்படுத்தி, 6 அடி உயரத்திற்கு தடுப்பு வேலி கட்டப்பட்டு வருகிறது. இருள் சூழ்ந்த பகுதியானதால், உயர் கோபுர மின் விளக்குகள் அமைப்பதுடன், அதிக திறன் கொண்ட கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட உள்ளன.
இதன் வாயிலாக, குப்பை கொட்டி சாலையை நாசப்படுத்துவதும், ஆக்கிரமிப்பும் தடுக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.