/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் சமுதாய கூடம் மேம்படுத்தும் பணி தீவிரம்
/
திருப்போரூர் சமுதாய கூடம் மேம்படுத்தும் பணி தீவிரம்
திருப்போரூர் சமுதாய கூடம் மேம்படுத்தும் பணி தீவிரம்
திருப்போரூர் சமுதாய கூடம் மேம்படுத்தும் பணி தீவிரம்
ADDED : ஜன 24, 2025 12:40 AM
திருப்போரூர்,  திருப்போரூர் பேரூராட்சி, 8வது வார்டில், ஓ.எம்.ஆர், சாலையை ஒட்டி சமுதாய நலக்கூடம் உள்ளது.
இதில், திருப்போரூர் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தண்டலம், ஆலத்துார், சிறுதாவூர் உள்ளிட்ட கிராம மக்கள், திருமணம், சங்க கூட்டம் என, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்த சமுதாய நலக்கூடம் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, பொலிவின்றி சிதிலமடைந்து காணப்பட்டது. மேலும், போதிய இடவசதியும் இல்லாமல் அப்பகுதிவாசிகள் சிரமப்பட்டனர். எனவே, சமுதாய நலக்கூடத்தை புதுப்பித்து, கூடுதல் கட்டடம் கட்டி மேம்படுத்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சமுதாய நலக்கூடத்தை புதுப்பித்து மேம்படுத்த, 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து சமுதாய நலக்கூடத்தை புதுப்பித்து மேம்படுத்துவதற்கான பணிகள் கடந்த ஆண்டு பிப்., மாதம் துவங்கப்பட்டது.
தற்போது கட்டுமான பணிகள் 70 சதவீதம் முடிந்து தீவிரமாக நடந்து வருகின்றன.

