/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேலை வாய்ப்பு முகாமில் 83 பேருக்கு பணி ஆணை
/
வேலை வாய்ப்பு முகாமில் 83 பேருக்கு பணி ஆணை
ADDED : அக் 18, 2024 08:33 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை, கலெக்டர் வளாகத்தில் நடத்தின.
இந்த முகாமில், 35 வேலையளிக்கும் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் பங்கேற்று, ஆண்கள் 189 பேர், பெண்கள் 102 பேர் என, 291 பேர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 12 பேர் ஆகியோரிடம் நேர்முக தேர்வு நடத்தினர்.
இதில், ஆண்கள் 56 பேர், பெண்கள் 25 பேர், மாற்றுத்திறனாளிகள் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, பணி ஆணைகளை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.
மேலும், முதற்கட்ட தேர்வில் 143 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தணிகைவேலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

