/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துாய்மை பாரத இயக்கம் திட்டத்தில் பள்ளி கழிப்பறை கட்ட பணி ஆணை
/
துாய்மை பாரத இயக்கம் திட்டத்தில் பள்ளி கழிப்பறை கட்ட பணி ஆணை
துாய்மை பாரத இயக்கம் திட்டத்தில் பள்ளி கழிப்பறை கட்ட பணி ஆணை
துாய்மை பாரத இயக்கம் திட்டத்தில் பள்ளி கழிப்பறை கட்ட பணி ஆணை
ADDED : நவ 28, 2024 02:35 AM
செங்கல்பட்டு, மாவட்டத்தில், தொடக்கப்பள்ளிகளுக்கு துாய்மை பாரத இயக்கத்தின் சார்பில், 114 கழிப்பறைகள் கட்டுவதற்கான நிர்வாக ஆணையை, அமைச்சர் அன்பரசன் நேற்று வழங்கினார்.
செங்கல்பட்டு உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், நேற்று பங்கேற்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி, சப் - கலெக்டர் நாராயணசர்மா, செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, மின் அழுத்த குறைபாடு, மின் கம்பம் மாற்றம், சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 206 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது, அனைத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், துாய்மை பணியாளர்கள் 56 பேருக்கு, பாதுகாப்பு கவசங்கள் வழங்கினார்.
மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு, துாய்மை பாரத இயக்கத்தின் வாயிலாக, 114 கழிப்பறைகள் கட்டுவதற்கான நிர்வாக ஆணையை வழங்கினார்.
கீரப்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த சின்னராஜி என்பவரின் மூன்று பசு மாடுகள் மின்சாரம் பாய்ந்து இறந்தன. அதற்கு, மின் வாரியம் சார்பில், 75,000 இழப்பீட்டு தொகையை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.