/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு போக்குவரத்து கழகத்தில் வாரிசுதாரர்களுக்கு பணி ஆணை
/
அரசு போக்குவரத்து கழகத்தில் வாரிசுதாரர்களுக்கு பணி ஆணை
அரசு போக்குவரத்து கழகத்தில் வாரிசுதாரர்களுக்கு பணி ஆணை
அரசு போக்குவரத்து கழகத்தில் வாரிசுதாரர்களுக்கு பணி ஆணை
ADDED : ஏப் 28, 2025 01:18 AM

மதுராந்தகம்,:அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து, பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி ஆணையை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், நேற்று வழங்கினார்.
விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலுார், வேலுார் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து, பணியின் போது 17 நடத்துநர்கள், இரண்டு ஓட்டுநர்கள் உயிரிழந்துள்ளனர்.
அவர்களின், வாரிசுதாரர்களான 19 நபர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா, செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மண்டலம், மதுராந்தகம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில், நேற்று நடந்தது.
அதில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் முன்னிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்று, வாரிசுதாரர்களுக்கு பணி அணையை வழங்கினார்.
இந்நிகழ்வில், மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழி, மதுராந்தகம் போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் மற்றும் போக்குவரத்துக் கழக நடத்துநர்கள், ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.

