/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின் கம்பத்தில் பைக் மோதி தொழிலாளி பலி
/
மின் கம்பத்தில் பைக் மோதி தொழிலாளி பலி
ADDED : மார் 14, 2024 11:12 PM
ஸ்ரீபெரும்புதுார்:அசாம் மாநிலம், தின்சுகியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜேக்கப் சோனா, 31. இவர், தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, பப்பு, 29, என்பருடன், மது அருந்திவிட்டு, ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மலைப்பட்டு கிராமத்தில் உள்ள நண்பரை சந்திக்க, 'ஹோண்டா யுனிகான்' பைக்கில் சென்றார்.
பிள்ளைப்பாக்கம் அருகே வந்தபோது, மதுபோதையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில், ஜேக்கப் சோனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பப்பு தலையில் காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

