/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செம்மஞ்சேரியில் தொழிலாளி உயிரிழப்பு
/
செம்மஞ்சேரியில் தொழிலாளி உயிரிழப்பு
ADDED : டிச 31, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி, வேடந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் அருள்தாஸ், 45; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம், செம்மஞ்சேரியில் உள்ள நண்பரை பார்க்க சென்றார்.
அங்கு தங்கியவர், நேற்று செம்மஞ்சேரி - புதுச்சேரி சாலையில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். வெகு நேரமாகியும் திரும்பி வராததால், அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது, நீச்சல் தெரியாத அருள்தாஸ், குளத்தில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. தகவலறிந்த செம்மஞ்சேரி போலீசார், உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.