/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி பலி
/
செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி பலி
செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி பலி
செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி பலி
ADDED : மார் 17, 2024 02:34 AM
கூடுவாஞ்சேரி:கொளப்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் போது, விஷவாயு தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சி, கொளப்பாக்கம் மேட்டுத்தெரு, அங்காளம்மன் கோவில் நகரில் வசித்து வந்தவர், தேவராஜ், 52. இவர், சுற்றுவட்டார பகுதியில் உள்ள வீடுகளில், செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியை செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை நெடுங்குன்றம், கொளப்பாக்கத்தில் உள்ள 'டி.வி.எஸ்., எமரால்டு' என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், செப்டிக் டேங்க் சுத்தம் செய்வதற்காக சென்றார்.
செப்டிக் டேங்க் மூடியை திறந்து, உள்ளே இறங்கி பணியில் ஈடுபட்ட போது, திடீரென விஷவாயு தாக்கியதில் செப்டிக் டேங்கிற்குள்ளேயே மயங்கி விழுந்தார்.
இதைத் தொடர்ந்து, அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள், மறைமலை நகரில் உள்ள தீயணைப்பு துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த மறைமலை நகர் தீயணைப்பு துறை போலீசார், டேங்கில் விஷவாயு தாக்கி பலியான தேவராஜ் உடலை மீட்டனர். மேலும், கிளாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து, கிளாம்பாக்கம் போலீசார், அவரது உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கிளாம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

