/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உலக தாய்ப்பால் வார விழா வெங்கலேரியில் விழிப்புணர்வு
/
உலக தாய்ப்பால் வார விழா வெங்கலேரியில் விழிப்புணர்வு
உலக தாய்ப்பால் வார விழா வெங்கலேரியில் விழிப்புணர்வு
உலக தாய்ப்பால் வார விழா வெங்கலேரியில் விழிப்புணர்வு
ADDED : ஆக 06, 2025 02:08 AM

திருப்போரூர்:வெங்கலேரி அங்கன்வாடி மையத்தில், உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி,நடந்தது.
திருப்போரூர் ஒன்றியம், ஆலத்துார் ஊராட்சியில் அடங்கிய வெங்கலேரி கிராமத்தில், அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு, குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர்.
கர்ப்பிணியர், தாய்மார்களின் ஆரோக்கியம் உள்ளிட்டவை கண்காணித்தல், ஆலோசனை வழங்குதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்மையத்தில், உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், தாய்மார்களுக்கு தாய்ப்பால் வழங்குவதால் தாய் - சேய் நலம் குறித்து விளக்கப்பட்டது.
மேலும், தாய்ப்பால் கொடுக்கும் முறையால் தாயின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், குழந்தைகளுக்கு உருவாகும் நலன்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், அப்பகுதி வார்டு கவுன்சிலர் சாவித்திரி ஏழுமலை, அங்கன்வாடி பணியாளர் வசந்தி, கர்ப்பிணியர், தாய்மார்கள் பங்கேற்றனர்.