/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உலக சுகாதார தினம் செங்கையில் விழிப்புணர்வு
/
உலக சுகாதார தினம் செங்கையில் விழிப்புணர்வு
ADDED : ஏப் 08, 2025 12:33 AM

செங்கல்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில், உலக சுகாதார தினத்தையொட்டி, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மருத்துவமனை வளாகத்தில் முதல்வர் சிவசங்கர், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜோதிகுமார் ஆகியோர், நேற்று துவக்கி வைத்தனர்.
இங்கு துவங்கிய பேரணி, ஜி.எஸ்.டி., சாலை வழியாக சென்று, ராட்டிணங்கிணறு பகுதியில் முடிந்தது. இதில், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் செவிலியர் கல்லுாரி மாணவியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு ஜெ.ஜெ., பல்நோக்கு மருத்துவமனை சார்பில், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பகுதியில், உலக சுகாதார தினத்தையொட்டி நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை, அரசு சிறப்பு வழக்கறிஞர் கனகராஜ், நேற்று துவக்கி வைத்தார். மருத்துவமனை நிர்வாகி டாக்டர் மின்னல் கொடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இங்கு துவங்கிய ஊர்வலம், ஜி.எஸ்.டி., சாலை வழியாக சென்று, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகில் முடிந்தது.

