/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அவ்வையார் விருது விண்ணப்பிக்கலாம்
/
அவ்வையார் விருது விண்ணப்பிக்கலாம்
ADDED : நவ 25, 2025 03:27 AM
செங்கல்பட்டு: அவ்வையார் விருதுக்கு, டிச., 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி, ஆண்டுதோறும் அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
வரும் 2026ம் ஆண்டு, சர்வதேச மகளிர் தினவிழாவின் போது, பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த மகளிர் ஒருவருக்கு, அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் சேவை பற்றிய செயல்முறை விளக்க புகைப்படம், விண்ணப்பதாரரின் சேவையை பாராட்டிய பத்திரிகை செய்தி உள்ளிட்ட விபரங்களுடன், வரும் டிச., 31ம் தேதிக்குள் (https;//awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதன் பின், உரிய படிவத்தில் கருத்துருவை தமிழ், ஆங்கிலத்தில் தயார் செய்து, கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில், மூன்று பிரதிகளை, வரும் ஜன., 9ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

