/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏ.டி.எம்., வந்த வாலிபரிடம் 'ஆட்டை' போட்ட ஆசாமி
/
ஏ.டி.எம்., வந்த வாலிபரிடம் 'ஆட்டை' போட்ட ஆசாமி
ADDED : நவ 25, 2025 03:28 AM
செம்மஞ்சேரி: செம்மஞ்சேரியில் உள்ள ஏ.டி.எம்., மிஷினில் பணம் செலுத்த வந்த வாலிபரிடம், 1,500 ரூபாய் 'ஆட்டை' போட்ட மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
செம்மஞ்சேரியைச் சேர்ந்தவர் டேனியல், 19. இவர், செம்மஞ்சேரி - நுாக்கம்பாளையம் இணைப்பு சாலையில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில், நேற்று முன்தினம் 1,500 ரூபாய் 'டெபாசிட்' செய்ய வரிசையில் நின்றார்.
இவருக்கு பின்னால் நின்ற நபர், 'டெபாசிட் செய்ய அதிக நேரமாகும் என தெரிகிறது.
என்னிடம் கொடுங்கள்; மொபைல் போன் பணப்பரிமாற்ற செயலியான 'ஜிபே' மூலம் அனுப்புகிறேன்' எனக் கூறினார். அவரது பேச்சை நம்பிய டேனியல், பணத்தை கொடுத்துள்ளார்.
அந்த நபரும், 'ஜிபே' மூலம் பணம் அனுப்பியதாக கூறியதோடு, பணப்பரிமாற்றம் செய்ததுபோல எஸ்.எம்.எஸ்., எனும் குறுஞ்செய்தியை காட்டி உள்ளார். ஆனால், டேனியலின் மொபைல் போனுக்கு எந்த எஸ்.எம்.எஸ்.,சும் வரவில்லை. அதற்குள், அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து, டேனியல் வங்கி கணக்கு இருப்பை சரிபார்த்துள்ளார். அப்போது, பணம் வரவில்லை என தெரிந்தது. இது குறித்து, வழக்கு பதிந்த செம்மஞ்சேரி போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.

