/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி
/
ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி
ADDED : நவ 25, 2025 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்: தாம்பரத்தில், ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற வாலிபர், ரயிலில் அடிபட்டு பலியானார்.
தாம்பரம் ரயில் நிலைய பிளாட்பாரம் 5க்கு, நேற்று காலை, செங்கல்பட்டில் இருந்து எழும்பூர் நோக்கி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.
அந்த நேரத்தில், 30 வயது மதிக்கத்தக்க நபர், 5வது பிளாட்பாரத்தில் இருந்து, 4வது பிளாட்பாரத்திற்கு தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, ரயிலில் அடிபட்டு அவர் பலியானார்.
போலீசார் உடலை கைப்பற்றி, தாம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து, அந்த நபரிடம் இருந்த ஏ.டி.எம்., கார்டை வைத்து, தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

