/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அனந்தமங்கலம் பள்ளியில் 'ஸ்மார்ட்' வகுப்பறை
/
அனந்தமங்கலம் பள்ளியில் 'ஸ்மார்ட்' வகுப்பறை
ADDED : நவ 25, 2025 03:30 AM
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் கல்வி வட்டத்திற்கு உட்பட்ட அனந்தமங்கலம் மேல்நிலைப் பள்ளியில் நேற்று, 'ஸ்மார்ட்' வகுப்பறை துவக்கப்பட்டது.
அனந்தமங்கலத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலின் அகவன் அறக்கட்டளை மூலமாக, அனந்தமங்கலம் பள்ளியில் 'ஸ்மார்ட்' வகுப்பறை ஏற்படுத்த, 6 லட்சம் ரூபாய் மதிப்பில், பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டடங்களுக்கு வண்ணம் பூசப்பட்டது.
பின், தரைப்பகுதியில் 'டைல்ஸ்' கற்கள் பதிக்கப்பட்டன.
மேலும், மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, 'ஏ.ஐ., டெக்னாலஜி' மூலமாக மாணவ - மாணவியர் கல்வி பயிலும் வகையில் 'ஸ்மார்ட்' வகுப்பறை துவங்கப்பட்டது.
அகவன் அறக்கட்டளையின் கிஷோர், ரங்கநாதன், ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஷ்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.

