/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அ.தி.மு.க., வசமுள்ள மாமல்லை கமிஷனர் பொறுப்பேற்க தயக்கம்?
/
அ.தி.மு.க., வசமுள்ள மாமல்லை கமிஷனர் பொறுப்பேற்க தயக்கம்?
அ.தி.மு.க., வசமுள்ள மாமல்லை கமிஷனர் பொறுப்பேற்க தயக்கம்?
அ.தி.மு.க., வசமுள்ள மாமல்லை கமிஷனர் பொறுப்பேற்க தயக்கம்?
ADDED : நவ 25, 2025 03:31 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரம் நகராட்சி அ.தி.மு.க., கட்டுப்பாட்டில் உள்ளதால், கமிஷனர் பொறுப்பேற்க தயங்குவதாக கூறப்படுகிறது.
மாமல்லபுரம் நீண்ட காலமாக, சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகமாக செயல்பட்டு வந்தது. இங்கு 15 வார்டுகளும், குறைவான மக்கள் தொகையுமே உள்ளது.ஆனாலும், சுற்றுலா பகுதி சிறப்பு, இவ்வூர் மேம்பாடு கருதி, தமிழக அரசு பேரூராட்சி நிர்வாகத்தை, இரண்டாம் நிலை நகராட்சியாக கடந்த பிப்ரவரி மாதம் தரம் உயர்த்தியது.
மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டவர்கள், சில மாதங்களில் மாறினர். மதுராந்தகம் கமிஷனர், மாமல்லபுரத்தை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.
இதற்கிடையே நகராட்சி நிர்வாகம், சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி கமிஷனர் பாலமுருகனை, மாமல்லபுரம் கமிஷனராக நியமித்தது.
ஆனால் அவரோ, மாமல்லபுரத்தில் பொறுப்பேற்காமல் தவிர்த்தார்.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தியும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு நகராட்சி கமிஷனர் சாம் கிறிஸ்டியன், கூடுதல் பொறுப்பாக மாமல்லபுரத்திற்கும் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், மாமல்லபுரம் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் பெரும்பான்மை வார்டு கவுன்சிலர்கள், அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இதனால், மாநகராட்சி கமிஷனர் பதவியை ஏற்க, அதிகாரிகள் தயங்குவதாக கூறப்படுகிறது.

