/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
/
மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 06, 2025 12:11 AM
செங்கல்பட்டு, சிறந்த சமுதாய அமைப்புக்கான, 'மணிமேகலை விருது'கள் பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாவட்டத்தில், 2024 - 25ம் ஆண்டு மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் சிறந்த சமுதாய அமைப்புகளாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள்.
கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர அளவிலான கூட்டமைப்பு, சிறந்த சமுதாய அமைப்பு உள்ளிட்டவற்றுக்கு மணிமேகலை விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த விருது பெற தகுதியான கருத்துகளை உடனடியாக, செங்கல்பட்டு மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிர் திட்டம் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

