/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'பர்தா' அணிந்து கைவரிசை கொரட்டூரில் இளம்பெண் கைது
/
'பர்தா' அணிந்து கைவரிசை கொரட்டூரில் இளம்பெண் கைது
ADDED : பிப் 12, 2025 12:36 AM
கொரட்டூர்,கொளத்துார், தேவி நகர், டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம், 73. கடந்த 7ம் தேதி, இவரது வீட்டிற்கு சென்ற 'பர்தா' அணிந்த நபர், பாலசுந்தரம் கண்ணில் மிளகாய் பொடியை துாவி, அவர் அணிந்திருந்த மூன்று சவரன் நகையை பறித்து தப்பினார்.
அவரது மகள் திவ்யா, 45, புகாரின்படி, கொரட்டூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து, அதே பகுதியைச் சேர்ந்த சுகன்யா, 24, என்பவரை பிடித்தனர்.
பி.பி.ஏ., பட்டதாரியான சுகன்யா, ஐ.டி., நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து, சில மாதங்களுக்கு முன் வேலையில் இருந்து வெளியேறி, பெற்றோர் நடத்தி வரும் மளிகை கடையை கவனித்து வந்தது தெரிந்தது.
தவிர, மொபைல் போனில் 'ஆன்லைன் பெட்டிங்' விளம்பரத்தை நம்பி, இரண்டு மாதங்களாக, 2 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார். வாங்கிய கடனை அடைப்பதற்காக, பக்கத்து வீட்டில் வசிக்கும் முதியவர் வீட்டிற்கு பர்தா அணிந்து சென்று செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.
முதியவர் வீட்டில் இருந்து தப்பிய சுகன்யா, கேமரா இல்லாத இடத்திற்கு சென்று, பர்தாவை கழற்றி வீசிவிட்டு, ஆட்டோவில் மளிகை கடைக்கு வந்துள்ளார். அந்த ஆட்டோகாரர் அளித்த தகவலின்படி, சுகன்யா போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
மூன்று சவரன் நகையை பறித்த கொரட்டூர் போலீசார், சுகன்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் நள்ளிரவு சிறையில் அடைத்தனர்.

