/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடையில் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது
/
கடையில் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது
ADDED : மே 24, 2025 02:19 AM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி மற்றும் வண்டலுார் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, நான்கு கடைகளில், பூட்டை உடைத்து பணம், மொபைல் போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இது குறித்து, கூடுவாஞ்சேரி மற்றும் வண்டலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கைரேகை பதிவுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகள்படி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபரை அடையாளம் கண்ட கூடுவாஞ்சேரி போலீசார், நேற்று முன்தினம் கொளத்துார் பகுதியில் அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் கொளத்துார், தில்லை நகர், மணி தெருவை சேர்ந்த ஜெயபிரதாப், 19 என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து ஒரு ஐ-போன், டியோ ஸ்கூட்டர், ஸ்மார்ட் டேப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பின், ஜெயபிரதாப் மீது ஏழு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.