sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரூ.6 லட்சம் மோசடி வாலிபர் கைது

/

ரூ.6 லட்சம் மோசடி வாலிபர் கைது

ரூ.6 லட்சம் மோசடி வாலிபர் கைது

ரூ.6 லட்சம் மோசடி வாலிபர் கைது


ADDED : ஜன 05, 2025 07:57 PM

Google News

ADDED : ஜன 05, 2025 07:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:கிளாம்பாக்கத்தில் ஸ்ரீராம் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் சுரேஷ், 34, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

சென்னை, முடிச்சூர் லட்சுமி நகர் பகுதியில் வசித்து வரும் சூரிய பிரகாஷ் , 24, என்பவர் எங்களது நிறுவனத்தில் பீல்ட் ஆபீஸராக பணிபுரிந்து வந்தார். இவர் எங்களது வாடிக்கையாளர் வீடுகளுக்கு சென்று, பணம் வசூல் செய்து, அதை அலுவலகத்தில்செலுத்தி வருவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக, அவர் வசூல் செய்த பணம் 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை அலுவலகத்தில் செலுத்தாமல் தலைமறைவாகி விட்டார்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கூடுவாஞ்சேரி போலீசார் தலைமறைவாக இருந்த சூரிய பிரகாசை நேற்று கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us