/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமியின் கருவை கலைத்த வாலிபர் கைது
/
சிறுமியின் கருவை கலைத்த வாலிபர் கைது
ADDED : பிப் 10, 2025 11:49 PM
சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர், கொளத்துாரைச் சேர்ந்த சஞ்சய் என்பவரை, ஏழு மாதங்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் சிறுமி கர்ப்பமானார்.
சிறுமி கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்ட சிறுமியின் காதலன் சஞ்சய், சிறுமிக்கு கரு கலைக்கும் மாத்திரையை கொடுத்துள்ளார். இதில், கடும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு கரு கலைந்த நிலையில், சிறுமியை குடும்பத்தினர் மீட்டு ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து, ஆர்.எஸ்.ஆர்., மருத்துவமனை நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின்படி, எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட கொளத்துாரைச் சேர்ந்த சஞ்சய், 24, 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.