/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கே.எம்.சி.,யில் பெண் நோயாளியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது
/
கே.எம்.சி.,யில் பெண் நோயாளியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது
கே.எம்.சி.,யில் பெண் நோயாளியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது
கே.எம்.சி.,யில் பெண் நோயாளியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது
ADDED : ஜன 13, 2025 11:48 PM

கீழ்ப்பாக்கம்,கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், நள்ளிரவு உள்நோயாளி பிரிவில் நுழைந்த போதை வாலிபர்ஒருவர், சிகிச்சையில் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், உள்நோயாளி மற்றும் புறநோயாளி பிரிவில், ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்தவகையில், வில்லிவாக்கத்தை சேர்ந்த 50 வயதுள்ள பெண் ஒருவர், பெண்கள் உள்நோயாளி பிரிவில், சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, உள்நோயாளி பிரிவில் நுழைந்த போதை வாலிபர் ஒருவர், அப்பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார். திடீரென அப்பெண்ணின் உடலில் தொட்டு, பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
அதிர்ச்சியடைந்த அப்பெண், கூச்சலிட்டதால், அந்த நபர் தப்ப முயன்றார்.அங்கிருந்த நோயாளிகள் மற்றும் உறவினர்கள் சிலர், அந்த நபரை பிடித்து, மருத்துவமனை வளாகத்தில் உள்ள போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், ராணிப்பேட்டையை சேர்ந்த சதீஷ்குமார், 25 என்பதும், உள்நோயாளி பிரிவில் வேலை பார்க்கும், தெரிந்த பெண் ஒருவரிடம் வேலை கேட்க வந்துள்ளார்.
அதீத போதையில், உள்நோயாளி வார்டின் வெளிபுறத்திலேயே படுத்து துாங்கியதும், நள்ளிரவு எழுந்து, வார்டுக்குள் சென்று, பெண்ணிடம் சில்மிஷம் செய்ததும் தெரிய வந்தது.
கீழ்ப்பாக்கம் போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிந்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
கடந்த புத்தாண்டு அன்றும் இதேபோல், மருத்துவமனைக்குள் வாலிபர் ஒருவர், பெண்ணிடம் சில்மிஷம் செய்து சிக்கினார்.
பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் ஒருவன் புகுந்து, உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மீண்டும் தலைநகரில் உள்ள அரசு மருத்துவமனையில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை என்ற நிலையை தெளிவுபடுத்துகிறது. பெண்கள் பாதுகாப்பு பற்றி சட்டசபையில் பேசிய ஸ்டாலின், இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார். அவரது ஆட்சியில் இதுபோன்ற 'சார்'கள் காப்பாற்றப் படுவதால்தான், மேலும் பல 'சார்'கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றனர்.
- பழனிசாமி,
அ.தி.மு.க., பொதுச்செயலர்.

