ADDED : பிப் 09, 2024 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தையூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், 48. கடந்த 5ம் தேதி, அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 18 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இதுகுறித்து, கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் பதிவான மொபைல்போன் சிக்னல் மூலம், மர்ம நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
அதில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பு, 20, என்பதும், இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
அன்புவை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 16.5 சவரம் நகை, பைக்கை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.