/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
/
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
ADDED : ஏப் 16, 2025 07:44 PM
செங்கல்பட்டு:அச்சிறுப்பாக்கம் அடுத்த, ஒரத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 45. இவர், கடந்த மார்ச் 23ம் தேதி, வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது, சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரைச் சேர்ந்தவர் மோகன், 28 என்பவர், பிரகாைஷ அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.
ஒரத்தி போலீசார் மோகனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மோகன் மீது, ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் உட்பட 5 க்கும் மேற்பட்ட வழக்கள் உள்ளதால், அவரை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு, எஸ்.பி., சாய் பிரணீத் பரிந்துரை செய்தார்.
மோகனை குண்டர் சட்டத்தில் அடைக்க, கலெக்டர் அருண்ராஜ், நேற்றுமுன்தினம், உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, புழல் சிறையில் உள்ள மோகனிடம், குண்டர் சட்ட நகலை போலீசார், நேற்று, வழங்கினர்.