/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போலீஸ் குடியிருப்பில் வாலிபர் தற்கொலை
/
போலீஸ் குடியிருப்பில் வாலிபர் தற்கொலை
ADDED : நவ 24, 2024 07:55 PM
திருப்போரூர்:கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம், குளச்சல் பகுதியை சேர்ந்தவர் பால டியோபின், 28. இவரின் மனைவி ஜெனிபர். இவர்களுக்கு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மூன்று மாத ஒரு ஆண் குழந்தை உள்ளது.
பால டியோபின், குடும்பத்துடன் திருப்போரூர் அடுத்த மேலக்கோட்டையூர் காவலர் குடியிருப்பில், ஓராண்டாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இவர், ரத்தினமங்கலம் தனியார் தோல் தொழிற்ச்சாலையில் வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி பிரசவத்திற்காக திருச்செங்கோடு பகுதியில் உள்ள தாய் வீட்டில் உள்ளார்.
இந்நிலையில், பால டியோபின் தன் மனைவிக்கு போன் செய்து, தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஊதியம் குறைவாக உள்ளதாகவும், வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சொந்த ஊருக்கு சென்று தொழில் துவங்க பணம் தேவைப்படுவதாகவும் கூறியதாக தெரிகிறது. மனைவி அதற்கு மறுத்ததால், இருவருக்கும் மனகஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மன வருத்தத்தில் இருந்த பால டியோபின், நேற்று முன்தினம் மாலை 7:00 மணிக்கு, மேலக்கோட்டையூரில் குடியிருக்கும் வீட்டின் படுக்கை அறையில் மின் விசிறியில், சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.