ADDED : டிச 01, 2025 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே சாலையை கடக்க முயன்ற வாலிபர் மீது கார் மோதி துாக்கி வீசியதில், பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுராந்தகம் அடுத்த கருங்குழி அருகே வாலிபர் ஒருவர், சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை, நேற்று இரவு கடக்க முயன்றார். அப்போது, சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் ஒன்று, அவர் மீது மோதி துாக்கி வீசியது.
இதில், படுகாயமடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி, இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

