/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தனியார் பேருந்து மோதி புலிப்பாக்கத்தில் வாலிபர் பலி
/
தனியார் பேருந்து மோதி புலிப்பாக்கத்தில் வாலிபர் பலி
தனியார் பேருந்து மோதி புலிப்பாக்கத்தில் வாலிபர் பலி
தனியார் பேருந்து மோதி புலிப்பாக்கத்தில் வாலிபர் பலி
ADDED : பிப் 04, 2025 10:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலைநகர்:செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம், வசந்தம் நகரைச் சேர்ந்தவர் சின்ராசு, 32.
இவர், நேற்று முன்தினம் இரவு சிங்கபெருமாள் கோவிலில் இருந்து, ஜி.எஸ்.டி., சாலையில் செங்கல்பட்டு நோக்கி, 'ஹீரோ ஹோண்டா பேஷன்' இருசக்கர வாகனத்தில் வந்தார்.
புலிப்பாக்கம் சந்திப்பு அருகில் வந்த போது, பின்னால் வந்த தனியார் பேருந்து சின்ராசு மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு தாலுகா போலீசார், சின்ராசு உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.