/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மீன் குட்டை நீரில் மூழ்கி இளைஞர் பலி
/
மீன் குட்டை நீரில் மூழ்கி இளைஞர் பலி
ADDED : ஜன 18, 2024 01:54 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கூத்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர், ஆல்வார் மகன் சபரி, 19. பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், சற்று மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இவர், தன் தாத்தா வேலு என்பவருடன், இயற்கை உபாதை கழிக்க, நேற்று, காலை 6:30 மணியளவில் சென்றபோது, கூத்திரம்பாக்கம் அருகேயுள்ள மீன் குட்டையில் இறங்கியுள்ளார்.
அங்கு, 10 அடி ஆழம் கொண்ட தண்ணீரில், சபரி விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். இவரது தாத்தா வேலுவுக்கு நீச்சல் தெரியாததால், சபரியை காப்பாற்ற ஊருக்குள் சென்று ஆட்களை அழைத்து வருவதற்குள் சபரி தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.
தண்ணீரின் மூழ்கிய இளைஞரின் சடலத்தை ஊர் மக்கள் மீட்டுள்ளனர். தகவலறிந்த காஞ்சி தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.