/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளத்தில் பைக்குடன் கவிழ்ந்து ஆலத்துாரில் வாலிபர் பலி
/
பள்ளத்தில் பைக்குடன் கவிழ்ந்து ஆலத்துாரில் வாலிபர் பலி
பள்ளத்தில் பைக்குடன் கவிழ்ந்து ஆலத்துாரில் வாலிபர் பலி
பள்ளத்தில் பைக்குடன் கவிழ்ந்து ஆலத்துாரில் வாலிபர் பலி
ADDED : அக் 01, 2024 12:29 AM
திருப்போரூர், - திருப்போரூர் பேரூராட்சி, அய்யம்பேட்டை தெருவை சேர்ந்தவர் கார்த்திக், 33. தனியார் கல்லுாரி பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர், இரவு வரை வீடு திரும்பவில்லை.
அவரின் உறவினர் குப்பன், 50, சில இடங்களில் தேடியும், அவர் கிடைக்காததால், திருப்போரூர் போலீசில் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், புகார் அளிக்கவில்லை.
எனினும், முழுமையாக தேடிவிட்டு கிடைக்கவில்லை என்றால், புகார் அளிக்கலாம் என, முடிவு செய்த கார்த்திக் குடும்பத்தினர், நேற்று காலை மீண்டும் தேடினர்.
ஓ.எம்.ஆர்., சாலை வழியாக தேடிச் சென்றபோது, ஆலத்துாரில் சாலையோர பள்ளத்தில், பைக்குடன் கவிழ்ந்ததுதலையில் படுகாயத்துடன் முட்புதரில் இறந்து கிடந்தது தெரிந்தது.
தகவல் அறிந்த திருப்போரூர் போலீசார், கார்த்திக் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்தனர்.
இதில், பூஞ்சேரியிலிருந்து திருப்போரூர் நோக்கி சூப்பர் எக்ஸ்.எல்., பைக்கில் கார்த்திக் வந்தபோது, ஆலத்துாரில் நிலைதடுமாறி, சாலையோர பள்ளத்தில் விழுந்து இறந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.