ADDED : டிச 07, 2024 08:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மஞ்சுமலை கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் ஜஸ்டின் ராஜ், 36. இவர், சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம், கேரளாவில் உள்ள வீட்டிற்கு செல்வதற்காக, அவருக்கு சொந்தமான ஹோண்டா டியோ இருச்சக்கர வாகனத்தில், சென்னையில் இருந்து கிளம்பி சென்றுள்ளார்.
செங்கல்பட்டு படாளம் அடுத்த ஜானகிபுரம் பகுதி சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.