ADDED : ஜூன் 29, 2025 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர், ஜூன் 29--
பைக் விபத்தில் வாலிபர் பலியானார்.
அரியலுார் மாவட்டம், செந்துறை பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த், 26. மகேந்திரா சிட்டியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு தன் நண்பனின் 'யமஹா'ஆர்15 பைக்கில் மறைமலை நகரில் உள்ள மற்றொரு நண்பரை பார்க்க சென்றார்.
மகேந்திரா சிட்டி கார் தொழிற்சாலை சந்திப்பு அருகில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை ஓரம் இருந்த இரும்பு துாணில் மோதியது.
இதில் பிரசாந்த் துாக்கி வீசப்பட்டு அருகில் இருந்த மரத்தில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.