ADDED : ஆக 16, 2025 12:13 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே வெளியம்பாக்கம் கிராமத்தில், திருவிழாவிற்கு ஒலிபெருக்கி அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து, இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அச்சிறுபாக்கம் அருகே ஆத்துார் சமத்துவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகாந்த், 32.
விழாக்களுக்கு ஒலி, ஒளி அமைக்கும் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று, வெளியம்பாக்கம் கிராமத்தில் உள்ள முருகர் கோவில் திருவிழாவிற்கு, அங்குள்ள ஒரு மின்கம்பத்தில் ஒலிபெருக்கி அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலின்படி சம்பவ இடத்திற்குச் சென்ற அச்சிறுபாக்கம் போலீசார், விஜயகாந்த் உடலை மீட்டு, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின், அங்கு பிரேத பரிசோதனை முடிந்து, உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
அச்சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

