/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
/
மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
ADDED : செப் 14, 2025 10:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிமலை: இறைச்சி கடையில் பணிபுரிந்த வாலிபர், மின்சாரம் பாய்ந்து பலியானார்.
ஆலந்துார், ராஜா தெருவை சேர்ந்தவர் விமல்ராஜ், 35. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஞாயிற்றுக்கிழமைதோறும் இறைச்சி கடையில் பணிபுரிவார்.
நேற்று, ஆலந்துார் முத்தம்ஜி தெருவில் உள்ள ஒரு இறைச்சி கடையில் பணிபுரிந்தார். மாலை, கடையை கழுவி கொண்டிருந்தபோது, டியூப் லைட் ஒயர் அறுந்து, விமல்ராஜ் மீது விழுந்தது. இதில், மின்சாரம் பாய்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பரங்கிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.