/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.6 லட்சம் மானியத்துடன் தொழில் கடன் செங்கை இளைஞர்களுக்கு அழைப்பு
/
ரூ.6 லட்சம் மானியத்துடன் தொழில் கடன் செங்கை இளைஞர்களுக்கு அழைப்பு
ரூ.6 லட்சம் மானியத்துடன் தொழில் கடன் செங்கை இளைஞர்களுக்கு அழைப்பு
ரூ.6 லட்சம் மானியத்துடன் தொழில் கடன் செங்கை இளைஞர்களுக்கு அழைப்பு
ADDED : செப் 18, 2025 01:28 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், வேளாண் கல்வி பயின்ற இளைஞர்களுக்கு, ஆறு லட்சம் ரூபாய் மானியத்துடன், தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, செங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், 10 இடங்களில், உழவர் நல சேவை மையங்கள் அமைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த மையங்களை துவக்க விருப்பம் உள்ளவர்கள், விவசாய கல்வியில் பட்டம் அல்லது பட்டய படிப்பு முடித்தவர்களாகவும், 45 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு, 10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய், வரை வங்கிக் கடன் வழங்கப்படும்.
இதில், 10 லட்சம் ரூபாயில் தொழில் துவங்குவோருக்கு மூன்று லட்சம் ரூபாயும், 20 லட்சம் ரூபாயில் தொழில் துவங்குவோருக்கு ஆறு லட்சம் ரூபாயும் மானியமாக வழங்கப்படும்.
இந்த உழவர் நல சேவை மையங்களில், விவசாயத் தொழிலுக்கு தேவையான விதை, உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகள், வேளாண் தொழில் இடுபொருட்கள் விற்பனை செய்வதுடன், பயிர்களைத் தாக்கும் பூச்சி, நோய் மேலாண்மை குறித்த ஆலோசனைகளும் வழங்கலாம்.
மேலும், நவீன தொழில்நுட்பத்துடன் விவசாய பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தல், வேளாண் இயந்திரம் வாடகை மையம், 'ட்ரோன்' சேவை, வேளாண் கருவிகளை பழுது பார்க்கும் பட்டறை என, விவசாயத் தொழில் சார்ந்த அனைத்து சேவைகளையும், இந்த மையத்தின் மூலமாக வழங்கலாம்.
தொழில் கடன் பெற விண்ணப்பித்து, இத்திட்டத்தில் பங்கேற்கும் நபர்களுக்கு, வேளாண் அறிவியல் நிலையத்தில் தேவையான பயிற்சிகள் அளிக்கப்படும்.
ஆர்வம் உள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் தொழில் கடன் பெற, விரிவான திட்ட அறிக்கையை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
பின், கடன் ஒப்புதல் பெற, உரிய ஆவணங்களை www.tnagrisnet.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.