/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'பெயிலில்' வந்த வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
/
'பெயிலில்' வந்த வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : மார் 19, 2025 01:02 AM
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த காவாதுார் கிராமம், லட்சுமிபுரம் சாலையைச் சேர்ந்தவர் ராகுல், 24. இவர் கடந்த மாதம், படாளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது 'பெயிலில்' வந்துள்ளார்.
மன உளைச்சலில் இருந்த இவர், கடந்த ஒரு வாரமாக வெளியே எங்கேயும் செல்லாமல், வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் பின்புறம் உள்ள வேப்பமரத்தில், நைலான் கயிற்றில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்குச் சென்ற சித்தாமூர் போலீசார், ராகுல் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.