/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நகை பறிபோனதாக நாடகமாடிய இளைஞர்
/
நகை பறிபோனதாக நாடகமாடிய இளைஞர்
ADDED : ஜன 12, 2025 02:23 AM
குன்றத்துார்,
குன்றத்துார், திருமலை நகரை சேர்ந்தவர் விஜய், 26. தனியார் ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார்.
அப்போது, சாலையோரம் தனியாக நின்று போன் பேசிக்கொண்டிருந்த போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், தன்னை தாக்கி, 2 சவரன் செயினை பறித்து சென்றதாக புகார் அளித்தார்.
குன்றத்துார் போலீசார் விஜயிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
தொடர்ந்து விசாரித்ததில், தன் நண்பரிடம் இருந்து 2 சவரன் நகையை வாங்கிய விஜய், அதை அடமானம் வைத்துள்ளார்.
நகையை திருப்பி கொடுக்க முடியாததால், மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றுவிட்டதாக நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து, விஜயை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.