/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற வாலிபருக்கு 'காப்பு'
/
பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற வாலிபருக்கு 'காப்பு'
பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற வாலிபருக்கு 'காப்பு'
பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற வாலிபருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 31, 2025 10:53 PM
மறைமலை நகர்:மறைமலை நகர் அருகே, பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷேக் அப்துல் மஜீத், 21.இவர், மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த மளிகை கடையின் அருகிலுள்ள வீட்டில் வசிக்கும், 40 வயதுடைய பெண், அருகிலேயே உணவகம் நடத்தி வருகிறார்.
இந்த உணவகத்தில், ஷேக் அப்துல் மஜீத் தினமும் சாப்பிட்டு வந்துள்ளார். நேற்று காலை, வழக்கம் போல சாப்பிட சென்ற போது, வீட்டின் முன்பக்கம் உள்ள குளியலறையில், குழாயிலிருந்து தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டுள்ளது.
அப்போது ஷேக் அப்துல் மஜீத், அப்பெண் குளிப்பதாக நினைத்து, தன் மொபைல் போனில் வீடியோ எடுத்து உள்ளார். அந்த நேரத்தில், வீட்டின் உள்ளே இருந்து வந்த அந்த பெண், இதைப் பார்த்து கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, ஷேக் அப்துல் மஜீத்தை மடிக்கி பிடித்து, மறைமலை நகர் காவல் நிலையத்தில் ஒப் படைத்தனர்.
போலீசார் விசாரித்த போது, வீடியோ எடுத்ததை ஷேக் அப்துல் மஜீத் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.