/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுவன் பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
/
சிறுவன் பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
சிறுவன் பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
சிறுவன் பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஜூலை 09, 2025 02:16 AM

செங்கல்பட்டு:சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம், தீர்ப்பளித்தது.
செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன், 10ம் வகுப்பு படித்து வந்தார். புதுச்சேரியைச் சேர்ந்த அமீது அப்துல்காதர், 21, என்பவர், செங்கல்பட்டில் தங்கி, மெக்கானிக் வேலை செய்து வந்தார்.
கடந்தாண்டு ஏப்., 13ம் தேதி, சிறுவன் டியூஷன் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, அமீது அப்துல்காதர் அவனைக் கடத்தி மிரட்டி, திருமணி ரயில்வே கடவுப்பாதையில் அருகே, சிறுவனுக்கு பாலியல் தாக்குதல் செய்துள்ளார்.
கடந்தாண்டு மே 3ம் தேதி, சிறுவனை மீண்டும் கடத்தி, அவனது பெற்றோரை கொலை செய்து விடுவதாக மிரட்டி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள பாழடைந்த கட்டடத்தில், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுவன் தன் பெற்றோரிடம் கூற, அவர்கள் செங்கல்பட்டு நகர போலீசில் புகார் அளித்தனர்.
இதன்படி வழக்குப்பதிவு செய்து, அமீது அப்துல்காதரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் லட்சுமி ஆஜரானார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அமீது அப்துல்காதருக்கு ஆயுள் தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நசீமா பானு நேற்று தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இழப்பீடாக, 4 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க உத்தரவிட்டார்.