sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வாழ்வு சிறக்க தர்ம காரியங்கள் அவசியம்

/

வாழ்வு சிறக்க தர்ம காரியங்கள் அவசியம்

வாழ்வு சிறக்க தர்ம காரியங்கள் அவசியம்

வாழ்வு சிறக்க தர்ம காரியங்கள் அவசியம்


ADDED : ஜூலை 14, 2011 11:04 PM

Google News

ADDED : ஜூலை 14, 2011 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ''நீதி, ஒழுக்கம், சமதர்மம் ஆகியவற்றை உள்ளடக்கியதே ஸ்வதர்மம்,'' என்று, ஐகோர்ட் நீதிபதி ராமநாதன் பேசினார்.

தென்னிந்திய தேசிய சங்கம் மற்றும் ரானடே நூலகம் இணைந்து, சண்முக சுந்தரம் நினைவு அறக்கட்டளை சார்பில், 'ஸ்வதர்மம்' என்ற தலைப்பில் சொற்பொழிவு மயிலாப்பூரில் நடந்தது. நிகழ்ச்சியில், சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி காதர்,'' இந்து சாஸ்திரங்கள், மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற, நல்ல கருத்துக்களை வழங்குகிறது. இந்து மதத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக, தர்ம காரியங்கள் உள்ளன. நல்ல நீதிபதி நன்றாக யோசித்து, ஆராய்ந்து, விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும்'' என்றார்.



இதில், சென்னை ஐகோர்ட் நீதிபதி ராமநாதன் பேசியதாவது: இந்து மதத்தில், தர்மம் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் 'ஸ்வதர்மம்' என்பது தனிப்பட்ட மனிதனின், தர்ம காரியங்களை பற்றி குறிப்பிடுவதாகும். வழக்கறிஞர், டாக்டர், சமூக ஆர்வலர் போன்றோர் ஒவ்வொரு விதமான தர்ம காரியங்களில் ஈடுபடுகின்றனர். சூழ்நிலைகளை பொறுத்து, இவர்களின் தர்மம் மாறுபடுகிறது. நம் முன்னோர்கள் செய்த தர்மங்களை, நாமும் தொடர்ந்து செய்ய வேண்டும். நீதி, ஒழுக்கம், சமதர்மம் ஆகியவற்றை உள்ளடக்கியதே ஸ்வதர்மம் ஆகும். ஒவ்வொருவரும் வாழ்வில் வெற்றி பெற, முன்னோர் செய்த தர்ம காரியங்களில் ஈடுபடவேண்டும். இவ்வாறு ராமநாதன் பேசினார்.

இதில், தென்னிந்திய தேசிய சங்கத் தலைவர் வேதகிரி சண்முக சுந்தரம், துணைத் தலைவர் மணி, பொருளாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.








      Dinamalar
      Follow us