/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்வாரிய ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
/
மின்வாரிய ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 14, 2025 01:15 AM
ஈரோடு, :தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், ஈரோட்டில் ஈ.வி.என்., சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஈரோடு கிளை தலைவர் குப்புசாமி தலைமை வகித்தார். பணி ஓய்வு பெறும் நாளில் ஓய்வு கால பண பலன்களை வழங்க வேண்டும். 2003க்கு பின் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற பணியாளர்களின் ஒப்பந்த ஊதியராக பணியாற்றிய காலத்தை கணக்கீடு செய்து ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ திட்டத்தை மின்வாரியமே நடத்த வேண்டும். பணிக்கொடையை, 20 லட்சம் ரூபாயில் இருந்து, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதேபோல் தமிழ்நாடு மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, கோபி மின் வட்ட கிளை சார்பில், கோபி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், தர்ணா போராட்டம் நேற்று நடந்தது.