/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூந்தமல்லியில் முளைத்துள்ள மெகா பேனர்கள்
/
பூந்தமல்லியில் முளைத்துள்ள மெகா பேனர்கள்
ADDED : ஆக 10, 2024 12:41 AM

பூந்தமல்லி நகராட்சி அருகே பூந்தமல்லி- - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பூந்தமல்லி டிரங் ரோடு, பூந்தமல்லி ஹரோடு, பூந்தமல்லி-பாரிவாக்கம் சாலை, பூந்தமல்லி-குன்றத்துார் சாலைகளில், சாலையோரம் உள்ள காலி நிலம், கட்டடங்கள் மீது பல இடங்களில் உரிய அனுமதியின்றி 'மெகா சைஸ்' பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இவற்றில் நடிகர், நடிகையர் மற்றும் கண்கவர் புகைபடம், வாசகங்கள் இடம்பெற்றுள்ளதால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்தில் சிக்குகின்றனர். பலத்த காற்றடிக்கும் போது, பேனர்கள் கிழிந்தும், உடைந்தும் சாலையில் விழுவதும் தொடர்ந்து வருகிறது.
எனவே, பூந்தமல்லி சுற்றுப்புறத்தில் நெடுஞ்சாலையோரம் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.