/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
' பங்க் ' ஊழியரிடம் நுாதன ' ஆட்டை '
/
' பங்க் ' ஊழியரிடம் நுாதன ' ஆட்டை '
ADDED : பிப் 26, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர், பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள நயாரா பெட்ரோல் 'பங்க்'கில் பணிபுரிபவர் ஆகாஷ், 19. நேற்று காலை இங்கு வந்த இருவர், '70 லிட்டர் ஆயில், தங்கள் இருப்பிடத்திற்கு டெலிவரி செய்ய வேண்டும்; கூடவே, 30,000 ரூபாய் சில்லரையும் வேண்டும்; அதையும் எடுத்து வா' என, ஆகாஷிடம் கூறியுள்ளனர்.
ஆகாஷும் மேலாளரிடம் பேசி, 70 லிட்டர் ஆயில் மற்றும் 30,000 ரூபாயுடன் சென்றுள்ளார். பெரம்பூர், குமாரசாமி தெருவில் ஆகாஷிடம், ஆயில் மற்றும் பணத்தை பெற்றுக் கொண்டு, காத்திருக்குமாறு கூறி சென்றுள்ளனர்.
அவர்கள் திரும்பி வராத நிலையில், தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆகாஷ், இது குறித்து செம்பியம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

