/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மொபைல் ஆப் வாயிலாக ரூ.1 லட்சம் 'ஆட்டை'
/
மொபைல் ஆப் வாயிலாக ரூ.1 லட்சம் 'ஆட்டை'
ADDED : ஜூன் 29, 2024 12:18 AM
திரு.வி.க.நகர், பெரவள்ளூர், வெற்றி நகரைச் சேர்ந்தவர் ஆச்சார்யா கிருஷ்ணகுமார் திவேதி, 38. இவரது வீட்டிலுள்ள தண்ணீர் சுத்திகரிப்பு கருவி பழுதானது.
அதை சரிசெய்ய, இணையதளத்தில் கிடைத்த ஒரு மொபைல் போன் எண்ணுக்கு கடந்த 21ம் தேதி அழைத்தார். எதிர்முனையில் பேசிய நபர், வேறு ஒரு மொபைல் போன் எண்ணை கொடுத்து, அதை தொடர்பு கொள்ளும்படி கூறியுள்ளார்.
அவ்வாறு செய்தபோது, ஒரு செயலியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யும்படி கூறியுள்ளனர். அந்த செயலியை பதிவிறக்கம் செய்த அடுத்த நாளில், ஆச்சார்யா வங்கி கணக்கில் இருந்து 99,999 ரூபாய் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து அவரது புகாரின்படி, திரு.வி.க.நகர் போலீசார், நேற்று முன்தினம் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

