/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாணயத்தை விழுங்கிய 1 வயது குழந்தை 'அட்மிட்'
/
நாணயத்தை விழுங்கிய 1 வயது குழந்தை 'அட்மிட்'
ADDED : ஆக 28, 2024 12:56 AM
அமைந்தகரை, அமைந்தகரை, பி.பி., கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் அஜய்ராஜ், 32; தனியார் நிறுவன ஊழியர்.
இவருக்கு, ஒரு மகள் மற்றும் ஒரு வயதுடைய அணுராஜ் என்ற மகனும் உள்ளனர்.
குழந்தை அணுராஜ் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் விளையாடியுள்ளான். அப்போது, கீழே கிடந்த 1 ரூபாய் நாணயத்தை எடுத்து விழுங்கி உள்ளான்.
இதனால், சிறிது நேரத்தில் குழந்தை உடல் சோர்ந்து மயங்கியுள்ளான். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை நாணயத்தை விழுங்கியுள்ளதாக கூறி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை, மேல் சிகிச்சைக்காக நேற்று, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறான்.
சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசார் விசாரிக்கின்றனர்.