/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புழல் ஏரி உபரிநீர் வடிகாலில் ரூ.10 கோடியில் வெள்ள தடுப்பு
/
புழல் ஏரி உபரிநீர் வடிகாலில் ரூ.10 கோடியில் வெள்ள தடுப்பு
புழல் ஏரி உபரிநீர் வடிகாலில் ரூ.10 கோடியில் வெள்ள தடுப்பு
புழல் ஏரி உபரிநீர் வடிகாலில் ரூ.10 கோடியில் வெள்ள தடுப்பு
ADDED : மே 03, 2024 12:42 AM

செங்குன்றம், புழல் ஏரி உபரிநீர் வடிகாலில், 10 கோடி ரூபாய் மதிப்பில், வெள்ள தடுப்பு சுவருடன், கரைகள் சீரமைப்பு பணி நடக்கிறது.
சென்னை, செங்குன்றத்தில், புழல் ஏரிக்கரை மற்றும் வடகரை, கிராண்ட்லைன் ஊராட்சிகளில், ஏரியின் உபரிநீர் வடிகால் ஆகியவற்றின் கரைகள், கடந்தாண்டு டிசம்பரில் பெய்த பலத்த மழையால் சேதமடைந்தன.
மேலும், புழல் ஏரி முழு அளவு நிரம்பி, மதகின் 'ஷட்டர்'கள் திறக்கப்பட்டால் வேகமாக வெளியேறும் வெள்ளம், அதன் எதிரே கரையோரம் உள்ள வீடுகளையும் பாதிப்பது வழக்கம்.
அந்த பாதிப்பை தவிர்க்கும் வகையில், வெள்ள தடுப்பு சுவர், இரும்பு கதவுடன் கூடிய நீர் உள்வாங்கி ஆகியவற்றை அமைத்து, மழை வெள்ளத்தில் சேதமடைந்த உபரிநீர் வடிகால் கரைகளை சீரமைக்க, 10 கோடி ரூபாய், நீர்வள ஆதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கடந்த மாதம் மேற்கண்ட பணிகள் துவங்கின.
அதில், புழல் ஏரி மதகின் தடுப்பு சுவரில் இருந்து, செங்குன்றம் உயர்மட்ட பாலம் வரை, உபரி நீர் வடிகாலின் இருபக்கமும் தலா, 300 மீட்டர் நீளத்திற்கு, கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. அந்த சுவர், 12 அடி உயரம் கொண்டது.
இந்த மேம்பாட்டு பணிகளை, வரும் நவம்பர் மாதத்திற்கு முன் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக, நீர்வள ஆதாரத் துறையினர் தெரிவித்தனர்.