/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதாள சாக்கடை திட்ட பணியில் குளறுபடி மடிப்பாக்கத்தில் 10 தெருக்கள் விடுபட்டன
/
பாதாள சாக்கடை திட்ட பணியில் குளறுபடி மடிப்பாக்கத்தில் 10 தெருக்கள் விடுபட்டன
பாதாள சாக்கடை திட்ட பணியில் குளறுபடி மடிப்பாக்கத்தில் 10 தெருக்கள் விடுபட்டன
பாதாள சாக்கடை திட்ட பணியில் குளறுபடி மடிப்பாக்கத்தில் 10 தெருக்கள் விடுபட்டன
ADDED : ஜூன் 01, 2024 12:23 AM

மடிப்பாக்கம், சென்னை மாநகராட்சி, வார்டு 188க்கு உட்பட்டது மடிப்பாக்கம். இங்கு 2022ல், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவங்கப்பட்டு, 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
ஆனால், இங்குள்ள ராம்நகர் தெற்கு, 8வது குறுக்குத் தெருவை ஒட்டியுள்ள யமுனை, சரஸ்வதி, வைகை, காவேரி, கங்கை, பெருமாள், அம்மன், பொன்னியம்மன், ஆறுமுகம், பெருமாள் ஆகிய 10 தெருக்கள், இத்திட்டத்தில் இடம் பெறாமல் விடுபட்டுள்ளன.
இது குறித்து, கைவேலி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகி ரவி, 80, கூறியதாவது:
தற்போது, மடிப்பாக்கத்தில் உள்ள இந்த 10 தெருக்களும், முதலில் பள்ளிக்கரணை பேரூராட்சியில் இடம் பெற்றிருந்தன.
அப்போது, பள்ளிக்கரணையில் பாதாள சாக்கடைத் திட்ட பணி துவக்கப்பட்டது. கடந்த 2010ல், 10 தெருக்களிலும் குழாய்கள் பதிக்கப்பட்டன. பின் 14 ஆண்டுகளாக, இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
தவிர, நிலத்திற்கு அடியில் பதிக்கப்பட்ட குழாய்கள், பல இடங்களில் சேதமாகி உடைந்துள்ளன. இதனால், பள்ளிக்கரணை பாதாள சாக்கடைத் திட்டம், தங்கள் தெருவுக்கு வருவது சந்தேகம் என மக்கள் நினைக்கின்றனர்.
கடந்த 2011ல், சென்னை மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்டபோது, இந்த 10 தெருக்களும் வார்டு 188ல் மடிப்பாக்கத்துடன் இணைக்கப்பட்டன.
கடந்த 2022ல், மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட்டு, பணிகள் துரித கதியில் நடக்கின்றன. இந்த பணியில், 10 தெருக்களும் சேர்க்கப்படவில்லை.
தற்போது வசிப்பது வார்டு 188க்கு உட்பட்ட மடிப்பாக்கம் என்பதாலும், எங்கள் 10 தெருக்களிலும் ஏற்கனவே குழாய்கள் பதிக்கப்பட்டிருப்பதாலும், மடிப்பாக்கம் பாதாள சாக்கடைத் திட்டத்தோடு எங்கள் தெருக்களையும் இணைக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.