/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
10 ஆண்டாக பாயும் கழிவுநீர் நோய் தொற்று அபாயம்
/
10 ஆண்டாக பாயும் கழிவுநீர் நோய் தொற்று அபாயம்
ADDED : ஜூன் 28, 2024 12:19 AM

ஆவடி, ஆவடி கோவில் பதாகையில், பல ஆண்டுகளாக சாலையில் ஓடும் கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில்பதாகை - திருமுல்லைவாயில் சாலையில், 6 மற்றும் 12 வார்டுகள் உள்ளன.
இங்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வள்ளுவர் தெரு, கிழக்கு மாட வீதி மற்றும் பூம்பொழில் நகர் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், திருமுல்லைவாயில் சாலை வழியாக பொன்னியம்மன் கோவில் தெருவில் பாய்ந்து, பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால், பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகள் முன், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதில், கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேற்கூறிய பகுதிகளில், வெளிப்படையாகவே சிலர் கழிவுநீரை சாலையிலேயே வெளியேற்றி வருகின்றனர்.
இதனால், திருமுல்லைவாயில் சாலையோரத்தில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. கழிவுநீரில் சிமென்ட் சாலை சேதமடைந்து வருகிறது.
கழிவுநீர் ஓடுவதால், சாலை சுருங்கி அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது.
மழைக்காலங்களில் கழிவு நீருடன், மழை நீரும் கலந்து வீடுகளில் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து, முறையற்ற கழிவு நீர் வெளியேறுவதை தடுத்து, பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.