/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நம்பர் பிளேட்டில் 'ஸ்டிக்கர்' 1,022 பேருக்கு அபராதம்
/
நம்பர் பிளேட்டில் 'ஸ்டிக்கர்' 1,022 பேருக்கு அபராதம்
நம்பர் பிளேட்டில் 'ஸ்டிக்கர்' 1,022 பேருக்கு அபராதம்
நம்பர் பிளேட்டில் 'ஸ்டிக்கர்' 1,022 பேருக்கு அபராதம்
ADDED : மே 08, 2024 12:08 AM
சென்னை, சென்னையில் வாகன பதிவு எண் தகட்டில், 'போலீஸ்' என, 'ஸ்டிக்கர்' ஒட்டி இருந்த வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
தற்போது வாகன பதிவு எண் தகட்டில், அரசியல் கட்சி சார்ந்தோ அல்லது வேறு ஏதேனும் பெயரில் தேவையற்ற வகையில், 'ஸ்டிக்கர்' ஒட்டிய வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.
அந்த வகையில் நேற்றுடன் ஐந்து நாட்களாக, 1,022 வாகன ஓட்டிகளுக்கு தலா, 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இனி விதிகளை மீறினால், 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்,'வாகன பதிவு எண் தகடுகளில், தேவையற்ற 'ஸ்டிக்கர்' ஒட்டக்கூடாது என எச்சரித்தும், வாகன ஓட்டிகள் அலட்சியமாக உள்ளனர். இனி, சோதனையை கடுமையாக்க உள்ளோம்' என்றனர்.