/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்
/
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : மே 08, 2024 12:08 AM

சென்னை,ஆந்திரா, மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு வந்தடையும் விரைவு ரயில்களில், கஞ்சா கடத்தலை தடுக்கும் வகையில், ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஒடிசா மாநிலம் பூரியில் இருந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9வது நடைமேடைக்கு வந்த ரயில் பயணியரை, ரயில்வே போலீசார் கண்காணித்தனர்.
அந்த நடைமேடையில் ஒரு 'டிராவல் பேக்' கேட்பாரற்று கிடந்தது. இதை, பார்த்த ரயில்வே போலீசார், அந்த டிராவல் பேக்கை திறந்து சோதனை நடத்தினர். இதில், 11 கிலோ கஞ்சா பொட்டலங்கள் சிக்கின. இதன் மதிப்பு 2.20 லட்சம் ரூபாய்.
இதையடுத்து, அவற்றை ரயில்வே காவல் நிலையத்துக்கு எடுத்து வந்தனர். இந்த கஞ்சா பொட்டலங்களை எடுத்து வந்த நபர் தொடர்பாக, ரயில் நிலையத்தில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

