/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொத்தனார் வீட்டு பீரோவில் 13 சவரன் நகைகள் மாயம்
/
கொத்தனார் வீட்டு பீரோவில் 13 சவரன் நகைகள் மாயம்
ADDED : செப் 08, 2024 12:24 AM
நன்மங்கலம், செப். 8--
-நன்மங்கலம், வீரபாண்டியன் பிரதானச் சாலையை சேர்ந்தவர் குமார், 40; கொத்தனார். இவர், நேற்று முன்தினம் இரவு வேலை செய்தவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக, பீரோவை திறந்து பார்த்துள்ளார்.
அப்போது, அதில் வைத்திருந்த 1.60 லட்சம் ரூபாயில் இருந்து, 1.30 லட்சம் ரூபாய் மாயமாகி இருந்தது.
மேலும், 20 சவரன் நகையில் 13 சவரன் நகைகள் திருடு போய் இருந்தன.
தகவலறிந்த மேடவாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சோதனையிட்டனர். பீரோ உடைக்கப்படாமல், திருட்டு நடந்திருப்பதால், தெரிந்த நபர்களே பணம், நகையை திருடியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.